கலைஞர் நூற்றாண்டு விழா - மருத்துவ காப்பீடு முகாம்

கலைஞர் நூற்றாண்டு விழா - மருத்துவ காப்பீடு முகாம்

மருத்துவ காப்பீட்டு முகாம் 

புதுக்கோட்டையில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மருத்துவ காப்பீடு முகாம் நடைபெற்றது.

கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மருத்துவ காப்பீடு முகாம் புதுக்கோட்டை டவுன் காலில் இன்று துவக்கி வைக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் எம் எம் அப்துல்லா ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்த முகாமில் புதுக்கோட்டை நகரப்புறத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு முகாமில் கலந்துகொண்டு காப்பீடு அட்டைகளை பெற்று சென்றனர்.

மேலும் இந்த முகாமில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியத்தின் புதிதாக பதிவு செய்தல், புதுப்பித்தல் மற்றும் நலத்திட்ட பதிவுகள் முகாமில் நடைபெற்றது. இதிலும் ஏராளமானோர் பங்கேற்று முகாமில் பதிவு செய்து கொண்டனர். இந்நிகழ்வில் திராவிட முன்னேற்றக் கழக நகரச் செயலாளர் தனலட்சுமி, லைட் ஹவுஸ் செந்தில், பிள்ளை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் ராஜேஸ்வரி, நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில், துணை தலைவர் லியாகத் அலி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் மகளிர் அணியினர் ஏராளமானோர் நிகழ்வில் பங்கேற்றனர்.

Tags

Next Story