கலைஞர் நூற்றாண்டு விழா - விளையாட்டு போட்டிகள்

கலைஞர் நூற்றாண்டு விழா -  விளையாட்டு போட்டிகள்
X

மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன்

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கபடி, கால்பந்து, கையுந்துபந்து விளையாட்டு போட்டிகள் இருபாலருக்கும் 15 வயதிற்கு மேற்ப்பட்டவர்கள் மற்றும் 25 வயது உட்பட்டவர்களுக்கு விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் 18.12.2023 மற்றும் 19.12.2023 அன்று காலை 9.00 மணி முதல் நடைபெற இருப்பதாகவும், இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள அணிகள் தங்கள் அணி பெயர்களை மாவட்ட விளையாட்டு அரங்க தொலைபேசி எண்ணில் 04562- 252947 என்ற எண்ணில் பதிவு செய்து கொள்ளலாம். மேற்படி கலந்து கொள்ளும் வீரர்/ வீராங்கனைகளுக்கு வயது சான்று அல்லது ஆதார் கார்டு நகல் பெற்று வர வேண்டும். வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். எனவே, மாவட்ட அளவிலான போட்டிகளில் அதிக அளவில்; மாணவ/மாணவிகள் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags

Next Story