கலைஞர் பிறந்தநாள் - பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள் விநியோகம்

கலைஞர் பிறந்தநாள் -  பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள் விநியோகம்

மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கல் 

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 101 வது பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 3-வது வார்டு பகுதியில் புனித அந்தோனியார் நடுநிலைப் பள்ளியில் உள்ளது. இந்த நடுநிலைப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் சுமார் 120க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 101 வது பிறந்தநாள் விழா மற்றும் பள்ளி முதலாம் முதல் நாளை முன்னிட்டு மூன்றாவது வார்டு நகர மன்ற உறுப்பினரும், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவருமான ஹைடெக் அன்பழகன் தலைமையில் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் இருதயராஜ் மற்றும் சக ஆசிரிய பெருமக்கள், நகர இளைஞரணி துணை அமைப்பாளர் சரத்குமார், தண்டபாணி, ஆனந்த், ஆறுமுகம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story