கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்!
வருமுன் காப்போம் திட்டம்
அன்னவாசல் அருகே பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது.புதுகோட்டை மாவட்ட சுகாதாரத் துறை சார்பில் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் வெள்ளனூர் ஊராட்சிக்குட்பட்ட வடசேரிப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமுக்கு மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ராம் கணேஷ் தலைமை வகித்தார். முகாமை புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலர் செல்லபாண்டியன், கந்தர்வகோட்டை சின்னதுரை தொடங்கிவைத்தனர்.
எம்எல்ஏ ஆகியோர் பங்கேற்று இதில் 1519 பேர் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனை பெற்றனர். 10 கர்ப்பிணிகளுக்கு மருத்துவப் பெட்டகம், பள்ளி மாணவர்கள் 10 பேருக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டது, கண் தொடர்பானமேல் சிகிச்சைக்கு 24 பேரும், பொது மருத்துவ சிகிச்சைக்கு 44 பேரும் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.
மருத்துவர்கள் செந்தில்குமார், சபீனா பேகம், கலையரசன், முரளிதரன் உள்ளிட்டோர் சிகிச்சை அளித்தனர். முகாமில் அன்னவாசல் ஒன்றியக் குழுத் தலைவர் ஒன்றியச் செயலர் ராமசாமி, மாரிமுத்து, மாவட்ட கவுன்சிலர் பழனிசாமி, கவுன்சிலர் கண்ணதாசன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன், ஊராட்சித் தலைவர் பார்வதி வேலுச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் அண்ணாதுரை தலைமையில் செய்தனர் . பரம்பூர் வட்டார மருத்துவர் நல்லப்பெருமாள் வரவேற்றார்.