சித்திரை திருவிழா முடிந்து கோவிலுக்கு சென்றடைந்த கள்ளழகர்

சித்திரை திருவிழா முடிந்து கோவிலுக்கு சென்றடைந்த கள்ளழகர்

கோவிலுக்கு வந்த கள்ளழகர்

மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர், மீண்டும் இருப்பிடமான அழகர்கோவில் வந்து சேர்ந்தார்.

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான, மதுரை வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சி கடந்த 05ஆம் தேதி நடைபெற்றது. இதற்காக கடந்த 03ஆம் தேதி அழகர்கோவிலிலிருந்து கள்ளழகர் என்று அழைக்கக்கூடிய கள்ளழகர். கண்டாங்கிபட்டு உடுத்தி,

வேல், வளரியுடம் கள்ளழகர் வேடம் பூண்டு தங்கபல்லக்கில் பல லட்சம் பக்தர்கள் கோவிந்தா என்ற கோஷத்துடன் மதுரைக்கு புறப்பட்டார். வழியில் பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளியபடி கடந்த 04ஆம் தேதி மதுரை மாநகர் எல்லை பகுதியான மூன்றுமாவடி வந்த கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நடைபெற்றது. இ

தையடுத்து அன்று இரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில், கள்ளழகருக்கு திருமஞ்சனம் நடைபெற்றதைத் தொடர்ந்து, மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளுவதற்காக, தங்க குதிரையில் புறப்பட்ட கள்ளழகர். இரவு பழமை வாய்ந்த "ஆயிரம் பொன்சப்பரத்தில்"

தங்ககுதிரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்த பின், 05ம் தேதி அதிகாலை 06.00 மணியளவில் வைகை ஆற்றில் எழுந்தருளினார். இதனைத் தொடர்ந்து 06ம் தேதி தேனூர் மண்டகப்படியில் மாண்டூக மகரிஷிக்கு சாப விமோசனமும் அன்று இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சியும் நடைபெற்றது., இதையடுத்து கடந்த 07-ஆம் தேதி, மதுரையில் உள்ள இராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் பூப்பல்லக்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து மதுரைக்கு புறப்பட்டார் கள்ளழகர் இன்று காலை 10.30 மணியளவில் அழகர்கோவிலுக்கு வந்து சேர்ந்தார். அப்பொழுது அழகாபுரி கோட்டை மற்றும் திருக்கோவில் கோட்டை வாயிலில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தோ, கோவிந்த்தோ என்ற கோஷத்துடன் மல்லிகை, தாமரை, மரிக்கொழுந்து மற்றும் ரோஜா உள்ளிட்ட பல்வேறு மலர்களால் மலைக்கு திரும்பிய கள்ளழகரை மலர் தூவி வரவேற்றனர். இதனைத்தொடர்ந்து, அழகர்கோவில் காவல்தெய்வமான பதினெட்டாம்படி கருப்பண்ணசாமியிடம் தகவல் அளித்து விட்டு, கோவில் உள்ளே செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது சாமியை சுமந்து வரும் சீர்பாத தூக்கிகள், ஆரவாரத்துடன் சுவாமியை குலுக்கி மகிழ்ச்சியை வெளிபடுத்தினர். இதனையடுத்து திருக்கோவிலின் உள்ளே கொண்டு செல்லப்பட்ட கள்ளழகருக்கு, திருஷ்டி கழிக்கும் விதமாக 21 பூசணிக்காய்கள் கொண்டு சுற்றி திருஷ்டி கழிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து கோவில் பட்டர்கள் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காண்பித்து கோவில் பிரகாரத்தில் உற்சவரை நிலைநிறுத்தினர்..

கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வதற்காக சென்றுவிட்டு மீண்டும் கோவில் திரும்பும் வரை, 450க்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் எழுந்தருளியும், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து விட்டு அழகர்மலையில் உள்ள திருக்கோவிலுக்கு திரும்பிய கள்ளழகருக்கு உடல் அழுப்பை போக்கும் விதமாக திருக்கோவில் பட்டர்கள் கள்ளழகர் உற்சவ திருமேனியை பிடித்து விடும் நிகழ்வும் நடைபெற்றது

Tags

Read MoreRead Less
Next Story