கொளத்தூர் தொகுதியில் கலாநிதி வீராசாமி வாக்கு சேகரிப்பு!

கொளத்தூர் தொகுதியில் கலாநிதி வீராசாமி வாக்கு சேகரிப்பு!

கலாநிதி வீராசாமி

வடசென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வடசென்னை வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து சென்னை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாமன்ற உறுப்பினர்கள், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளருமான பி.கே சேகர்பாபு தலைமையில், சென்னை மாநகர மேயர் பிரியா முன்னிலையில் கொளத்தூர் கௌதமபுரம் பகுதியில் பொதுமக்களிடையே உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தனர்.

இந்நிகழ்வில், கொளத்தூர் கிழக்குப் பகுதிக் கழகச் செயலாளர் ஐ.சி.எப். வ.முரளிதரன், மேற்குப் பகுதிக் கழகச் செயலாளர் ஏ.நாகராசன் எம்.சி., மண்டலக் குழுத் தலைவர்கள் ஶ்ரீராமுலு, கூ.பி. ஜெயின், மற்றும் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags

Next Story