கலசபாக்கம் : ஸ்ரீ பூண்டி மகான் 45 ஆம் ஆண்டு குருபூஜை திருவிழா

கலசபாக்கம் : ஸ்ரீ பூண்டி மகான் 45 ஆம் ஆண்டு குருபூஜை திருவிழா
X

குரு பூஜை 

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த பூண்டி கிராமத்தில் ஸ்ரீ பூண்டி மகான் 45 ஆம் ஆண்டு குருபூஜை திருவிழா சிறப்பான முறையில் நடைபெற்றது அதில் ஏராளமான பக்தர்கள் குருபூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் குருபூஜை திருவிழாவில் அதிகாலை 5:30 மணிக்கு ஸ்ரீ பூண்டி மகான் ஜீவசமாதி நடை திறப்பு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து காலை 6 மணி அளவில் மங்கள வாத்தியத்துடன் சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றது. காலை 7 மணி அளவில் பூண்டி மகான் கோயிலில் ரகுநாத் சுவாமிகள் கோவில் அருகில் கொடியேற்ற திருவிழா நடைபெற்றது. காலை 7:30 மணிக்கு அன்னதானங்கள் வழங்கப்பட்டது. காலை 9 மணிக்கு விநாயகர் பெருமாளுக்கு கேள்வி யாகம் நடைபெற்றது. வரதன் சுவாமிகள், பாலாஜி கஸ்தூரி, சுவாமிகளுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பூஜை பொருட்கள் அனைத்தும் ஸ்ரீ பூண்டி மகான் ஜீவசமாதியை சுற்றி வலம் வந்தது. அதைத் தொடர்ந்து 11 மணியளவில் கண்கண்ட தெய்வம் பூண்டி சத்குருநாதருக்கு மகா அபிஷேகம் ஆராதனை அலங்காரங்கள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மகேஸ்வர பூஜை, சாதுக்களுக்கு வாஸ்திரதானம் மற்றும் அன்னதானம் பூண்டி மகான் ஜீவசமாதியில் வழங்கப்பட்டது. சிறப்பு ஆன்மீக விழாக்கள் சிறப்பான முறையில் நடைபெற்றது. எம்எல்ஏ சரவணன், குருபூஜை திருவிழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பக்தர்களுக்குஅன்னதானங்களை வழங்கினார் அதனைத் தொடர்ந்து சாதுக்களுக்கு காவி உடைகள் வழங்கி சொற்பொழிவு பூஜையில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன் ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சிவகுமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வழக்கறிஞர் சுப்பிரமணியம், மாவட்ட கவுன்சிலர் பட்டம்மாள் முனுசாமி, நகர செயலாளர் சௌந்தர்ராஜன், மாவட்ட பிரதிநிதி ராஜசேகரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட ஓட்டுனர் அணிதுணை அமைப்பாளர் அன்பரசு, ஒன்றிய கவுன்சிலர் பிச்சாண்டி, முன்னாள் பஞ்சாயத்து துணைத் தலைவர் ராஜா, பூண்டி மகான் சுவாமி குருக்கள் பாலமுருகன், கிளைச் செயலாளர் செந்தில், மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story