காளியம்மன் கோவில் திருவிழா நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குட ஊர்வலம்

காளியம்மன் கோவில் திருவிழா நூற்றுக்கணக்கான பக்தர்கள்  பால்குட ஊர்வலம்

தரங்கம்பாடி அருகே காளியம்மன் கோவிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தரங்கம்பாடி அருகே காளியம்மன் கோவிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருபஞ்சாக்கை கிராமத்தில் புகழ்பெற்ற காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் இந்த ஆண்டு வைகாசி திருவிழா கடந்த 3 - ந் தேதி தொடங்கியது அதனை தொடர்ந்து தினமும் காளியம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

வைகாசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான பால்குட திருவிழாவை முன்னிட்டு அம்மாநாற்றங்கரையிலிருந்து இருந்து பால்குடம் , அலகு காவடி, பறவைக் காவடிகள், உடன் கரகம் புறப்பட்டு வாணவேடிக்கை மேளதாளம் முழங்க தோட்டம், அன்னப்பன்பேட்டை மெயின் ரோடு வழியாக கோவிலை வந்தடைந்தது. அதனை தொடர்ந்து காளியம்மனுக்கு இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம் மற்றும் பக்தர்கள் கொண்டு வந்த பாலில் அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பால்குட திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்திருந்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

Tags

Next Story