மேட்டுபட்டியில் வெகுவிமர்சையாக நடைபெற்ற காளியம்மன் கோவில் திருவிழா

மேட்டுபட்டியில் வெகுவிமர்சையாக நடைபெற்ற காளியம்மன் கோவில் திருவிழா

சிறப்பு அலங்காரத்தில் சுவாமி 

திண்டுக்கல் மேட்டுப்பட்டி காளியம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

திண்டுக்கல் 98 பட்டிகளின் தாய் கிராமமாக விளங்கக்கூடிய மேட்டுப்பட்டி அருள்மிகு காளியம்மன், பகவதி அம்மன், லட்சுமி விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்கள் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

ஊர் நாட்டாண்மை அழகர்சாமி தலைமையில் அஞ்சல் துறை முருகேசன் ராஜேந்திரன் மற்றும் வினைச்சாமி முன்னிலையில் விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான குழந்தைகள் முதல் பெரியவர் வரை நூற்றுக்கு மேற்பட்டோர் பால்குடம் எடுத்து வந்தனர். இந்த ஊர்வலம் மேட்டுப்பட்டி, மொட்டணம் பட்டி, விஸ்தரிப்பு ஏரியா,

எனாமல் பேக்டரி ரோடு வழியாக திருக்கோவிலை சென்றடைந்து.அம்மனுக்கு பக்தர்கள் கொண்டு வந்த பால்குடங்கினால் அபிஷேகம் நடைபெற்று சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story