புதுச்சத்திரம் அருகே காளியம்மன் கோவில் அகற்றம்L போராட்டம்

காளியம்மன் கோவில் அகற்றும் பணி
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த புதுச்சத்திரம் யூனியனுக்குட்பட்ட வனக்காரன்புதூர் பகுதியில் காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. காளியம்மன் கோவிலை கடந்த 3 வருடங்களுக்கு முன்பு அப்பகுதி மக்கள் கோவிலை புதுப்பித்து காட்டினர். இக்கோவில் அரசு புறம்போக்கு நிலத்தில் அமைந்துள்ளதாகவும் கோவிலை அகற்ற வேண்டும் என தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த சில நபர்கள் புகார் அளித்து வந்தனர்.
இது சம்மந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தனர். தற்போது வழக்கு விசாரணையில் நீதிமன்ற உத்தரவின்படி அரசு புறம்போக்கு நிலத்தில் கோவில் கட்டப்பட்டுள்ளதாகவும் அதனை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகள், தென்னை மரங்களையும் அகற்றினர்.
பின் ஜே.சி.பி., இயந்திரத்தின் மூலம் காளியம்மன் கோவிலை அகற்ற முயன்ற போது மக்கள் தடுத்து நிறுத்தி, தரையில் படுத்து அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 4 மணி நேரத்திற்கு பின் போலீசாரின் பாதுகாப்புடன் அதிகாரிகள் காளியம்மன் கோவிலை முற்றிலும் அகற்றினார்.
