கழிவுநீர் கால்வாய் அமைக்க களியனுாரினர் வலியுறுத்தல்

கழிவுநீர் கால்வாய் அமைக்க களியனுாரினர் வலியுறுத்தல்

கழிவுநீர் மற்றும் மழைநீர் வெளியேறும் வகையில், வடிகால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கழிவுநீர் மற்றும் மழைநீர் வெளியேறும் வகையில், வடிகால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம், களியனுார் பிரதான சாலையோரம் 25க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் வீட்டு உபயோக கழிவுநீர் வெளியேற்றவும், மழைநீர் வடியவும் கால்வாய் வசதி இல்லை. இதனால், இப்பகுதியில் வசிப்போர் தங்களது வீட்டு உபயோக கழிவுநீரை சாலையில் விடவேண்டிய நிலை உள்ளது. கழிவுநீர் வெளியேற கால்வாய் வசதி இல்லாததால், சாலையோரம் மாத கணக்கில் தேங்கும் கழிவுநீர், சகதியாக மாறியுள்ளது. இதனால், கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, களியனுார் பிரதான சாலையில் வீட்டு உபயோக கழிவுநீர் மற்றும் மழைநீர் வெளியேறும் வகையில், வடிகால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story