நாச்சியார்கோயில் சீனிவாச பெருமாள் கோயிலில் கல்கருட சேவை

நாச்சியார்கோயில் சீனிவாச பெருமாள் கோயிலில் கல்கருட சேவை நடைபெற்றது.
கும்பகோணம் அருகேயுள்ள நாச்சியார்கோயில் சீனிவாசப்பெருமாள் கோயிலில் கல்கருட சேவை நடைபெற்றது. இக்கோயிலில் பங்குனி திருத்தேர் திருவிழா 10 நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம். அது போல இவ்வாண்டும் இவ்விழா கடந்த 17ம் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் தினமும் யாளி, கிளி, சூரிய பிரபை, சேஷ, அன்னபட்சி, கமல், அனுமன், யானை, குதிரை என பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற் றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கல்கருட சேவை நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்காண பக்தர்கள் தரிசனம் செய்தனர். வரும் 25ம் தேதி தேரோட்டமும், நண்பகல் தீர்த்தவாரியும், பின்னர் 26ம் தேதி செவ்வாய்க்கிழமை சப்தாவர்ணத்துடன் இவ்வாண்டிற்கான பங்குனி தேர்திரு விழா நிறைவுபெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் பிரபாகரன், கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags

Next Story