தனியார் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை

தனியார் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை

மாணவர்கள்

கள்ளக்குறிச்சியில் ஜே. எஸ்.குளோபல் அகாடமி சிபிஎஸ்இ பள்ளி 10ஆம் வகுப்பு போதுத்தேர்வில் 100 % தேர்ச்சி பெற்றது.
கள்ளக்குறிச்சி ஜே.எஸ்., குளோபல் அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளி 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சியை பெற்று சாதனை படைத்துள்ளது. மாணவர் அபிேஷக் 486 மதிப்பெண்களை பெற்று பள்ளி அளவில் முதலிடத்தை பிடித்துள்ளார். இவர், பாடவாரியாக தமிழ் 99, ஆங்கிலம் 94, கணிதம் 99, அறிவியல் 94, சமூக அறிவியல் 100 மதிப்பெண்களை பெற்றுள்ளார். அதேபோல் மாணவர் ஹர்ஷித், தமிழ் 98, ஆங்கிலம் 94, கணிதம் 91, அறிவியல் 952, சமூக அறிவியல் 90 465 மதிப்பெண்களுடன் இரண்டாமிடத்தையும், மாணவி பிரதீபா, தமிழ் 98, ஆங்கிலம் 88, கணிதம் 92, அறிவியல் 96, சமூக அறிவியல் 86 என 460 மதிப்பெண்களுடன் மூன்றாமிடத்தையும் பிடித்தனர். முதல் மதிப்பெண் பெற்ற மாணவர் அபிேஷக் சமூக அறிவியல் பாடத்தில் சென்டம் பெற்றுள்ளார். பள்ளியில் பத்தாம் வகுப்பு தொடங்கிய இரண்டாவது ஆண்டிலேயே பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவிகளும் 450 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று மாவட்ட அளவில் சாதனை படைத்துள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் நிறுவனர் டாக்டர் செந்தில்குமார், தாளாளர் ஜனனிசெந்தில்குமார், பள்ளி முதல்வர் ஜெயலட்சுமி, துணை முதல்வர் பாபு மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Tags

Read MoreRead Less
Next Story