கள்ளக்குறிச்சி : ஐயப்ப சுவாமிக்கு 108 திரவிய பூஜை

கள்ளக்குறிச்சி : ஐயப்ப சுவாமிக்கு 108 திரவிய பூஜை
X

திரவிய பூஜை 

கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் ஐயப்ப சுவாமிக்கு 108 விசேஷ திரவியங்கள் மற்றும் சங்காபிஷேகம் நடந்தது. கள்ளக்குறிச்சி சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவிலில் ஐயப்ப சுவாமிக்கு நேற்று 108விசேஷ திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 7:00 மணிக்கு மகாகணபதி ஹோமத்துடன் துவங்கி, பூர்ணாஹீதியும், தீபாராதனையும் நடந்தது. காலை 10:30 மணிக்கு பால், தயிர், மஞ்சள், விபூதி, சந்தனம், இளநீர், எலுமிச்சை, தேன், நெய், கங்காதீர்த்தம் உள்ளிட்ட 108 விசேஷ திரவியங்கள், கனி வகைகளால் சிறப்பு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து 108 சங்காபிேஷகம் நடந்தது. இதிலிருந்த புனித தீர்த்தங்களை சுவாமிக்கு ஊற்றி அபிஷேகம் செய்தனர்.

Tags

Next Story