அரசு மருத்துவ கல்லூரியில் மனநல நல்லாதரவு மன்ற விழா

X
மனநல நல்லாதரவு மன்ற விழா
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரியில் மனநல நல்லாதரவு மன்ற விழா நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மாணவர்களுக்கான மனநல நல்லாதரவு மன்ற விழா நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் மனநல நல்லாதரவு மன்ற விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லுாரி முதல்வர்(பொ) நேரு தலைமை தாங்கி பேசினார். மருத்துவர்கள் பழமலை, சமீம், பொற்செல்வி, அனுபமா, பேராசிரியர் செல்வராஜ், நிர்வாக அலுவலர் அசோகன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். விழாவில் மன அழுத்தம் மற்றும் மனம் சம்பந்தமான அனைத்திற்கும் ஆலோசனை, சிகைச்சை முறைகள், ஹெல்ப்லைன் குறித்து மருத்துவ கல்லுாரி மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. விழாவில் முதலாமாண்டு மருத்துவ கல்லுாரி மாணவ மாணவிகள் பலர் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாட்டினை மனநல ஆலோசகர் பாக்கியராஜ் செய்திருந்தார். மருத்துவர் கணேஷ்ராஜா நன்றி கூறினார்.
Next Story
