கள்ளக்குறிச்சியில் 109.8 டிகிரி வெயில் பதிவு

கள்ளக்குறிச்சியில் 109.8 டிகிரி வெயில் பதிவு

கள்ளக்குறிச்சியில் நேற்று 109.8 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.

கள்ளக்குறிச்சியில் நேற்று 109.8 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.

கள்ளக்குறிச்சி பகுதியில் 109.8 டிகிரி வெயில் பதிவானதால் குழந்தைகள், முதியோர் அவதியடைந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைகின்றனர். சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் வெளியே வருவதற்கு சிரமப்படுவதால், சாலையில் நடந்து செல்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. அத்தியாவசிய தேவைக்காக வெளியே வரும் சிலர் குடைபிடித்துவாறு செல்கின்றனர். கள்ளக்குறிச்சி நகர பகுதியில் மக்களிடம் நடமாட்டம் எப்போதும் அதிகளவில் காணப்படும்.

ஆனால் நேற்று அதிகபட்சமாக மாவட்டத்தில் 109.8 டிகிரி வெயில் பாதிவானது. வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் பெரும்பாலான சாலைகளில் மக்கள் நடமாட்டமின்றி இன்றி காணப்படுகிறது. மாலையில் வெயிலின் தாக்கும் குறைந்த பின்பு தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு சென்று வருகின்றனர். பகலில் வெயிலின் தாக்கம் மற்றும் இரவு நேரங்களில் வீடுகளில் புழுக்கம் அதிகமாக இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Tags

Next Story