மீன் வியாபாரியிடம் ரூ. 97 ஆயிரம் பறிமுதல்
பணம் ஒப்படைப்பு
வானுார் அடுத்த கொடூர் சாலையில் நேற்று காலை வானுார் பி.டி.ஓ., அலுவலக உதவி பொறியாளர் குகநாதன் தலைமயிைல் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி மற்றும் பறக்கும் படை குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது, திண்டிவனம் மார்க்கத்தில் இருந்து காலாப்பட்டிற்கு வந்த (கேஎல்.46.எக்ஸ்.3596) என்ற பதிவெண் கொண்ட லாரியை பறக்கும் படையினர் மடக்கி சோதனை செய்தனர்.
அதில் வாகனத்தில் இருந்த புதுச்சேரி பெரிய காலாப்பட்டு பகுதியை சேர்ந்த ரமேஷ், 50; என்பவரை சோதனை செய்தனர். அதில், ஒரு பையில் ரூ. 97 ஆயிரம் பணம் இருந்தது தெரிய வந்தது. விசாரணையில், புதுச்சேரியில் மீன் வியாபாரத்திற்காக பணத்தை எடுத்து வந்ததாக தெரிவித்தார். ஆனாலும், உரிய ஆவணங்கள் இல்லாததால் அவரிடம் இருந்த ரூ. 97ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்து,ஆனாலும், உரிய ஆவணங்கள் இல்லாததால் அவரிடம் இருந்த ரூ. 97 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்து, வானூர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முருகேசனிடம் ஒப்படைத்தனர்.