மாணவர்களுக்கு பரிசு வழங்கிய கள்ளக்குறிச்சி எஸ்.பி

மாணவர்களுக்கு பரிசு வழங்கிய கள்ளக்குறிச்சி எஸ்.பி

தமிழ்நாடு காவலர் சேமநல நிதி திட்டம் மூலம் பொதுதேர்வில் முதல் 3 இடங்கள் பெற்ற மாணவர்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிசு வழங்கினார்.



தமிழ்நாடு காவலர் சேமநல நிதி திட்டம் மூலம் பொதுதேர்வில் முதல் 3 இடங்கள் பெற்ற மாணவர்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிசு வழங்கினார்.

தமிழ்நாடு காவலர் சேமநல நிதி திட்டத்தில் மாணவர்களுக்கு பரிசு வழங்கிய கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஒவ்வொரு ஆண்டும் காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்களின் பிள்ளைகள் 10 மற்றும் 12 வகுப்புகளில் முதல் மூன்று இடங்களில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு தமிழ்நாடு காவலர் சேமநல நிதி திட்டத்தில் பரிசுத்தொகை மற்றும் விருதுகள் வழங்கப்படுகிறது.

அதன்படி இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா மாவட்ட காவல் அலுவலகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த கல்வி ஆண்டில் காவலர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்களின் பிள்ளைகள் 10 மற்றும் 12 வகுப்புகளில் முதல் மூன்று இடங்களில் தேர்ச்சி பெற்ற ஆறு மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை நேரில் அழைத்து மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கி அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மேலும் மாணவர்கள் மேற்படிப்பில் சிறந்து விலங்கிட அறிவுறைகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன், தனிப்பிரிவு ஆய்வாளர் சண்முகம், பரிசு பெற்ற மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story