கள்ளக்குறிச்சி காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

எஸ்.பி., எச்சரிக்கை 

கள்ளக்குறிச்சி காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை
கள்ளச்சாராயம் காய்ச்சுவது மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவர்கள் என, எஸ்.பி., எச்சரிக்கை விடுத்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. இங்கு காய்ச்சப்படும் கள்ளச்சாராயம் பல்வேறு பகுதிகளுக்கு கடத்தி செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் கருணாபுரம், மாதவச்சேரி, சேஷசமுத்திரம் ஆகிய பகுதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 200க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாகினர். 57 பேர் இறந்தனர். இதனையடுத்து கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு புகலிடமாக விளங்கும் கல்வராயன்மலையில் எஸ்.பி.,ரஜத் சதுர்வேதி உத்தரவின் பேரில், 3 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 148 போலீசார் 11 குழுக்களாக நேற்று சாராய வேட்டையில் ஈடுபட்டனர். இதில் 1000 லிட்டர் சாராய ஊறல்களை போலீசார் கண்டுபிடித்து அழித்தனர். அதேபோல் 19 காவல் நிலைய பகுதியில் நடத்திய சோதனையில் 1,864 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 139 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டது. 18 பெண்கள் உட்பட 59 பேரை போலீசார் கைது செய்தனர். மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என, எஸ்.பி., ரஜத்சதுர்வேதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags

Next Story