ஆட்சிஸ்வரர் கோயில் சுவாமிகள் மூன்று முறை வலம் வந்து காட்சி
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் நகரில் தொண்டை நாட்டு சிவத்தலங்களில் ஒன்றானதும்,, இரண்டு கருவறைகளை கொண்டதுமான, திருஞானசம்பந்தர் தேவாரம் பாடப்பட்ட திருத்தலங்களில் ஒன்றான இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அன்றிலிருந்து,3 -ஆம் நாள் 63 நாயன்மார்கள் உற்சவமும், 5-ஆம் நாள் திருக்கல்யாண உற்சவமும், 7-வது நாள் திருத்தேர் உற்சவம் நடைபெற்றது. விழாவின் 10 - வது நாள் அன்று கொடி மரத்திலிருந்து கொடி இறக்கமும், தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.
விழாவின் 11-வது நாளான இன்று ஆட்சீஸ்வரர்,இளங்கிளி அம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கோவிலில் இருந்து அரப்பேடு பகுதி சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்,பெரும்பேர்கண்டிகை சுப்பிரமணிய சுவாமி ஆட்சீஸ்வரரின் இளங்கிளி வருகைக்காக காத்திருந்து சுவாமி வந்தவுடன் மூன்று முறை சுவாமி அம்பாள் ஆகியோரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் படைசூழ ஓம் நமச்சிவாய அரோகரா கோஷத்துடன் மூன்று முறை சுற்றி வலம் வந்து வணங்கி வழிபட்டனர்.
அதன் பின்னர் பெரும்பேர் கண்டிகைச் சென்ற ஆட்சீஸ்வரர் இளங் கிளி அம்மன் திருமண காட்சிக் கோலத்தில் அகத்தியருக்கு காட்சி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து அச்சிறுப்பாக்கம் உள்ள வஜ்ரகிரி மலையை ஆட்சீஸ்வரரும் இளங்கிளி அம்மனும் கிரிவலமாக வந்து கிரிவலப் பாதையில் உள்ள கிராமங்களில் உள்ள பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.