கல்லூரிக் கனவு

கல்லூரிக் கனவு

திருப்பத்தூரில் நடைபெற்ற நான் முதல்வன் கல்லூரிக் கனவு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் ஊக்க உரையாற்றினார்.


திருப்பத்தூரில் நடைபெற்ற நான் முதல்வன் கல்லூரிக் கனவு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் ஊக்க உரையாற்றினார்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெற்ற நான் முதல்வன் கல்லூரிக் கனவு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் ஊக்க உரை. பெற்றோர்கள் எதில் தோல்வி அடைந்தார்களோ அந்த தோல்வியை சுமந்து கொண்டு சொல்கின்ற வடிகால்களாய் பிள்ளைகள் இருக்க வேண்டாம். திருப்பத்தூரில் நடைபெற்ற நான் முதல்வன் கல்லூரிக் கனவு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் ஊக்க உரை. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சக்தி நகர் அருகே உள்ள தூய நெஞ்சக் கல்லூரியில் திருப்பத்தூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை நிர்வாகம் சார்பில் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர் உயர் கல்வியில் என்ன படிக்கலாம் எதை படித்து என்ன வேலைக்கு செல்ல முடியும் என்பது குறித்த பல்வேறு வழிகாட்டுதல் கருத்தரங்கம் நிகழ்ச்சி அரசு திட்டத்தின் கீழ் இயங்கும் நான் முதல்வன் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி மூலம் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர் ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருக்கிறது உங்கள் ஆசைகளை உங்கள் விருப்பங்களை சரியாக புரிந்து கொண்டு அதற்கு ஏற்ற உயர்கல்வி பாதையை நீங்களாகவே தேர்ந்தெடுங்கள். ஏனென்றால் பெற்றோர்களுடைய வடிகால்கள் இல்லை பிள்ளைகள். உங்கள் பெற்றோர்கள் எதை தேர்ந்தெடுத்து தோல்வி அடைந்தார்களோ அந்த தோல்வியை சுமக்கின்ற வடிகால்களாக பிள்ளைகள் இருக்க வேண்டாம். உங்கள் ஆசை உங்கள் வாழ்க்கை உங்கள் விருப்பம் உங்கள் கனவு அது உங்களுடையது அதற்கு ஏற்ற உயர் கல்வியை தேர்ந்தெடுக்க இந்த நான் முதல்வன் கல்லூரி கனவு கருத்தரங்க நிகழ்ச்சி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று பேசினார். மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் தேர்ச்சி பெற்ற 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனி சுப்பராயன், திருப்பத்தூர் சப் கலெக்டர் ராஜசேகரன், திருப்பத்தூர் தாசில்தார் ஆனந்தகிருஷ்ணன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story