கல்லூர்- பள்ளத்தூர் சாலை சீரமைக்க கோரிக்கை!
சாலை சீரமைக்க கோரிக்கை!
புதுக்கோட்டை திருமயம் தாலுகாவை சேர்ந்த கல்லூரியில் சுமார் 4000 பேர் வசித்து வருகின்றனர். இங்கு கரும்பு, நெல், வாழை அதிகளவு பயிரிடப்படுகிறது. அரிசி ஆலைகளும் உள்ளன. இதன் மூலம் 500 பேர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். இங்கிருந்து பள்ளத்தூருக்கு 6 கிலோமீட்டர் தூரத்துக்கு தார் சாலை உள்ளது. இந்த சாலையில் பேப்பர் மில்லில் இருந்து நெல் குடோன் உரக்கிடங்கு வழியாக பள்ளத்தூர் போலீஸ் ஸ்டேஷன் வரையிலான சாலையில் கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதில் மழைநீர் தேங்கி சேரும் சகதியுமாக இருப்பதால் வாகன ஓட்டுனர்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த சாலை வழியாக தினமும் நூற்றுக்கும் அதிகமான லாரிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றி வருகின்றன. இதனால் வாகன ஓட்டுனர்கள் மற்றும் கிராமங்கள் நலன் கருதி இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் அரிமளம் ஒன்றிய அதிமுக இளைஞரணி செயலாளர் செந்தில்குமார் கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.
Next Story