கல்குவாரி அனுமதி: மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்ட மக்கள்



மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டத்தில் உள்ள கல்பாடி எறையூர், திருவிளக்குறிச்சி பாடலூர் ஆகிய பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டகிராம பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர் அதனைத் தொடர்ந்து அவர்கள் தெரிவிக்கையில், தங்கள் கிராமத்தில் உள்ள குவாரிகள் முறைகேடாக செயல்படுவதால், நீர்மட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் வெடிபொருள் கலந்த தண்ணீர் இருப்பதால் மக்களுக்கு உடல் உபாதைகள் மற்றும் கிட்னி பிரச்சனைகள் வருவதாகவும், மேலும் அதிகமான வாகனங்கள் செல்வதால், புழுதி ஏற்ப்பட்டு வாகனங்களில் செல்ல முடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளது,, இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், ஆகவே கல்குவாரி வாகனங்களை அதிகமாக இருப்பதை குறைத்து வாகனம் செல்வதற்கான நேரத்தை ஒதுக்கி தர வேண்டும்.
மேலும் கல்குவாரி அனுமதி மற்றும் ஏலம் நடைபெறுவதை நிறுத்த வேண்டும். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் உடனடியாக இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இதில் நடவடிக்கை இல்லை என்றால் கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டத்தோடு தங்களது ஆதார் அட்டை, குடும்ப அட்டை. உள்ளிட்ட ஆவணங்களைமாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்பது என்றும் , மேலும் அனுமதி வழங்கப்படும் குவாரி முன்பு சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாகவும், தெரிவித்துள்ளனர்.



