கல்குவாரியில் லாரியை ரிவேர்ஸ் எடுக்கும் போது வட மாநில இளைஞர் மீது மோதி விபத்து

கல்குவாரியில் லாரியை ரிவேர்ஸ் எடுக்கும் போது வட மாநில இளைஞர் மீது மோதி விபத்து

விபத்து

கல்குவாரியில் லாரியை ரிவேர்ஸ் எடுக்கும் போது,வட மாநில இளைஞர் மீது மோதி விபத்து.
கல்குவாரியில் லாரியை ரிவேர்ஸ் எடுக்கும் போது,வட மாநில இளைஞர் மீது மோதி விபத்து. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தினேஷ் மகன் தர்மேந்திர குமார் வயது 23. இவர் கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, முன்னூர், ஆலம்பாளையம் பகுதியில் செயல்படும் எஸ்கேபி ப்ளூ மெட்டல் நிறுவனத்தில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். அதே அய்யம்பாளையத்தைச் சேர்ந்த பழனிச்சாமி வயது 47.டாரஸ் லாரி டிரைவர் உடன் பணியாற்றி வந்தார். இந்நிலையில் மார்ச் 7ஆம் தேதி மாலை 4:30 மணி அளவில் டாரஸ் லாரியை பழனிச்சாமி, எஸ்கேபி ப்ளூ மெட்டல் நிறுவனத்தில் ரிவர்ஸ் எடுக்கும் போது, தர்மேந்திர குமார் இருப்பதை கவனிக்காமல் வேகமாக ரிவேர்ஸ் எடுத்ததால், லாரி தர்மேந்திர குமார் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த தர்மேந்திர குமாரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கோவையில் உள்ள கங்கா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து தர்மேந்திர குமாருடன் பணியாற்றி வரும் குமார் என்பவர், அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக லாரியை கவனக்குறைவாக ரிவேர்ஸ் எடுத்து விபத்து ஏற்பட காரணமான பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் க.பரமத்தி காவல்துறையினர்.

Tags

Next Story