தேர்தலை புறக்கணித்த கல்வராயன் மலை மக்கள்

தேர்தலை புறக்கணித்த கல்வராயன் மலை மக்கள்

கல்வராயன் மலை மக்கள் தேர்தலை புறக்கணித்தனர்.


கல்வராயன் மலை மக்கள் தேர்தலை புறக்கணித்தனர்.
கல்வராயன்மலையில் அடிப்படை வசதிகள் செய்யாததை கண்டித்து கிராம மக்கள் லோக்சபா தேர்தலை புறக்கணிப்பு செய்தனர். கல்வராயன்மலையில் உள்ள ஆரம்பூண்டி பஞ்சாயத்துக்குட்பட்ட பட்டிவளவு, கெடார், மனப்பாச்சி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் அடிப்படை வசதிகள் செய்யப்படாததை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் 303 ஓட்டுகளை கொண்டுள்ள கெடார் ஓட்டுச்சாவடியில் நேற்று பிற்பகல் 2:00 மணி வரை 3 ஓட்டுகள் மட்டுமே பதிவாகி இருந்தது. இதனை அறிந்த கல்வராயன்மலை தாசில்தார் கோவிந்தன், துணை தாசில்தார் செங்குட்டுவன் மற்றும் ஆர்.ஐ., பாலகிருஷ்ணன் எஸ்.ஐ., மணிகண்டன் ஆகியோர் அப்பகுதி பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து மாலை 3:00 மணி முதல் பொதுமக்கள் ஓட்டளிக்க வந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story