வேட்பாளரின் பெயரை மாற்றிக் கூறி வாக்கு சேகரித்த கமலஹாசன்.

வேட்பாளரின் பெயரை மாற்றிக் கூறி வாக்கு சேகரித்த கமலஹாசன்.

கமலஹாசன் பரப்புரை  

துறையூரில் திமுக வேட்பாளர் அருண் நேருவின் பெயரை மறந்து அவரது தந்தை கே என் நேருவின் பெயரை கூறி மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் வாக்கு சேகரித்ததால் சலசலப்பபு ஏற்ப்பட்டது.
திருச்சி மாவட்டம் துறையூரில் பெரம்பலூர் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் அருன் நேருவை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக மக்கள் நீதி மையம் கமல்ஹாசன் துறையூர் பகுதிக்கு வந்திருந்தார். துறையூர் பாலக்கரை பகுதியில் நேற்றிரவு பேசும் போது தனக்காக வாக்கு கேட்க வரவில்லை எனவும் தம்பி கே. என் .நேருவுக்கு வாக்கு சேர்க்க வந்தேன் எனவும் பேசினார். வேட்பாளரை பெயரை குறிப்பிடாமல் வேட்பாளர் தந்தையின் பெயரை குறிப்பிட்டு வாக்கு சேகரித்தார். இதனால் கட்சி நிர்வாகிகளிடையே சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் வேட்பாளரின் பெயரை பலமுறை எடுத்துக் கூறிய பிறகு சமாளித்துக் கொண்டு வேட்பாளரின் பெயரை கூறி வாக்கு சேகரித்தார்.

Tags

Read MoreRead Less
Next Story