சிறப்பாக செயல்பட்ட அரசு பள்ளிகளுக்கு காமராஜர் விருது

சிறப்பாக செயல்பட்ட அரசு பள்ளிகளுக்கு காமராஜர் விருது
கல்வி மற்றும் கல்வி இணை செயல்பாடுகளில் சிறப்பாக செயல்பட்ட அரசு பள்ளிகளுக்கு காமராஜர் விருது மற்றும் பரிசுத்தொகையினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
கல்வி மற்றும் கல்வி இணை செயல்பாடுகளில் சிறப்பாக செயல்பட்ட அரசு பள்ளிகளுக்கு காமராஜர் விருது மற்றும் பரிசுத்தொகையினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் 2023 -2024 ஆம் கல்வியாண்டில் கல்வி மற்றும் கல்வி இணை செயல்பாடுகளில் சிறப்பாக செயல்பட்ட அரசு பள்ளிகளுக்கு காமராஜர் விருது மற்றும் பரிசுத்தொகையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் வழங்கினார். தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றன. அதனடிப்படையில் சிறப்பாக செயல்படும் பள்ளிகளையும், மாணவ, மாணவிகளையும் ஊக்குவிக்கும் வகையில் காமராசர் விருது வழங்கி கவுரவிக்கிறது.

தமிழக அரசு காமராஜர் விருதினை சிறந்த பள்ளிகளை தேர்ந்தெடுத்து வருடத்திற்கு ஒருமுறை வழங்கி வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் இந்த வருடம் துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி என அனைத்து விதமான பள்ளிகளில் இருந்தும், குழுக்கள் அமைத்து அதில் 4 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

அதனடிப்படையில், கிழவிகுளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு ரூ.25,000/- த்திற்கான காசோலையும், மானூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு ரூ.50,000/-த்திற்கான காசோலையும், மம்சாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு ரூ.75,000/-த்திற்கான காசோலையும், சூலக்கரை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.1,00,000/-த்திற்கான காசோலையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள் வழங்கி, வரும் கல்வி ஆண்டில் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளின் கல்வி தரத்தை உயர்த்த வேண்டுமென தலையாசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.

Tags

Next Story