காமராசு எழுதிய புத்தகம் பேசுதடி என்ற சிறுகதைக்கு பரிசு

காமராசு எழுதிய புத்தகம் பேசுதடி என்ற சிறுகதைக்கு  பரிசு

சிறுகதை போட்டி 

மாநில அளிவிலான சிறுகதை போட்டியில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய புத்தகம் பேசுதடி என்ற சிறுகதைக்கு மூன்றாம் பரிசு வழங்கப்பட்டது.

காரைக்குடி வள்ளுவர் பேரவை மற்றும் பூதக்கண்ணாடி கல்வி மையம் இணைந்து நடத்தும் டாக்டர் அய்க்கண் நினைவு மாநில அளவிலான சிறகதைப் போட்டி பரிசளிப்பு விழா காரைக்குடி செக்காலை வள்ளுவர் அரங்கத்தில் நடந்தது. தமிழகம் முழுவதும் இருந்து 245 சிறுகதை போட்டியில் கலந்து கொண்டது. காரைக்குடி அழகப்ப அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் ச. முருகேசன் இதில் முதல், இரண்டாம், மூன்றாம் பரிசு பெற்ற கதைகள் மற்றும் 10 சிறப்பு சிறுகதைகளை தேர்ந்தெடுத்தார்.

இதில் முதல் பரிசை கோவையை சேர்ந்த சஹானா கோவிந்து பெற்றார். கதையின் பெயர் சூரசம்ஹாரம். இரண்டாம் பரிசு மதுரை செந்தமிழ்க்கல்லூரி உதவிப் போராசிரியர் கம்பம் புதியவன், பருவம் 16 என்ற சிறுகதைக்காக பெற்றார். மூன்றாம் பரிசாக தமிழ்ச்செம்மல் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய புத்தகம் பேசுதடி என்ற சிறுகதைக்கு கிடைத்தது.

சிறப்பு பரிசாக பத்து பேருக்கு ஆறுதல் பரிசு கிடைத்தது. திருமிகு ஆசிரியர் என்ற சிறுகதைக்கு நன்னிலம் இளங்கோவனும், ஊர் கேணி கதைக்கு வேலூர் இராம்குமார், யாதும் ஊரே யாவரும் கேளீர் கதைக்கு புதுச்சேரி இரா. பாரதிராஜா, பொறுப்பு கதைக்கு தமிழ்ச்செம்மல் நெல்லை பாமணி அவர்களுக்கும், நீர் உயர நெல் உயரும் கதைக்கு திருவாரூர் வீ. உதயக்குமாரனும், உடைந்து போகும் பிம்பங்கள் என்ற கதைக்கு சென்னை ஆனந்த குமாரும், வகுப்புத் தோழன் கதைக்கு புதுக்கோட்டை பாலஜோதி ராமச்சந்திரனும், அகதி கதைக்கு திருப்பூர் நித்யாவும், வரம் கதைக்கு திருவாரூர் மகேஷ்வரன், ஞாபகவனம் கதைக்கு விழுப்புரம் அன்பாதவன் ஆகியோரும் பெற்றார்கள்.

இதற்கான பரிசளிப்பு விழா காரைக்குடியில் நடந்தது. காரைக்குடி அழகப்பா பல்கலைக்குழகக் கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் ப. சிவக்குமார் தலைமை வகித்தார். வள்ளுவர் பேரவை நிறுவனத்தலைவர் நல்லாசிரியர் மெ .செயம் கொண்டான் வரவேற்றார். எழுத்தாளர் அருணாதேவி அய்க்கண், குபேரர் திருக்கோயில் அறங்காவலர் சுப. நாச்சியப்பன், பூதக்கண்ணாடி மாத இதழ் புரவலர் சேவியர்அந்தோணிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல் பரிசாக 10 ஆயிரம் ரூபாயும், இரண்டாவது பரிசாக 7 ஆயிரம் ரூபாயும், 3 வது பரிசாக 5 ஆயிரம் ரூபாயும், ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது.

பரிசுகளை எழுத்தாளர் மல்லிகா அய்க்கண் வழங்கினார். தமிழ்ச்செம்மல் மெய்யாண்டவர், காரைக்குடி நேஷனல் கேட்டரிங் கல்லூரி தளாளார் சையது. வள்ளுவர் பேரவை செயற்குழு உறுப்பினர் ராஜா அலெக்சாண்டர். இலட்சிய ஆசிரியர் கார்திகேயன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பூதக்கண்ணாடி மாத இதழ் மாணவச் செய்தியாளர் இர. பிரபாகரன் நன்றி கூறினார்.

Tags

Next Story