காமட்டான் கிராம தேவதை வழிபாடு

காமட்டான் கிராம தேவதை வழிபாடு
X

காமட்டான் கிராம தேவதை

கள்ளக்குறிச்சியில் பெண்கள் பங்கேற்ற காமட்டான் கிராம தேவதை வழிபாடு நடந்தது.
கள்ளக்குறிச்சி பெருமாள் கோவில் தெருவில் ஆண்டுதோறும் பாரம்பரியமாக காமட்டான் எனும் கிராம தேவதை வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். அவ்வாறு வழிபாடு நடத்தினால், பெண்களுக்கு திருமண தோஷம் நீங்கி, தடையின்றி திருமணம் நடக்கும் என நம்பிக்கை. இந்த ஆண்டுக்கான காமட்டான் வழிபாடு நேற்று முன்தினம் இரவு நடந்தது. அலங்கரிக்கப்பட்ட கிராம தேவதை சிலைக்கு 100க்கும் மேற்பட்ட பெண்கள் பழம், பூ, இனிப்பு, புடவை, ஜாக்கெட் போன்ற பொருட்களை வைத்து வழிபாடு நடத்தினர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story