கம்பனின் ஸ்கிரிப்ட் வலுவானது கே பாக்யராஜ்!

கம்பனின் ஸ்கிரிப்ட் வலுவானது                     கே பாக்யராஜ்!

புதுக்கோட்டை

புதுக்கோட்டை இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் ராமாயணம் தொடர்ந்து எடுக்கப்படுவதற்குக் காரணம் அதன் 'ஸ்கிரிப்ட்' வலுவாக இருப்பதுதான் என்றார் திரைப்பட இயக்குநர் கே. பாக்கியராஜ்.
புதுக்கோட்டை இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் ராமாயணம் தொடர்ந்து எடுக்கப்படுவதற்குக் காரணம் அதன் 'ஸ்கிரிப்ட்' வலுவாக இருப்பதுதான் என்றார் திரைப்பட இயக்குநர் கே. பாக்கியராஜ். புதுக்கோட்டையில் கம்பன் கழகம் சார்பில் நடைபெறும் 49ஆவது கம்பன் பெருவிழாவின் 3ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை 'கம்பன் என்னும் திரைக்கதை மன்னன்' என்ற தலைப்பில் அவர் மேலும் பேசியது: இப்போது திரைத்துறையில் பயன்படுத்தப்படும் 'கிராபிக்ஸ்'முகப்ப தொழில்நுட்பங்கள் அனைத்தையும் அந்தக் காலத்திலேயே எழுத்தில் கொண்டு வந்தவர் கம்பன். ராவணனின் அவையில் தனது வாலையே சுருட்டி நாற்காலியாக்கி உட்கார்ந்தார் அனுமன். அதேபோல ராமனைப் போல ஒருவரை சீதைக்கு முன் நிறுத்திப் பேசியிருப்பார். இவையெல்லாம் இன்றைய திரைப்படங்களின் 'கிராபிக்ஸ்' திறன்கள். அதேபோல ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் அறிமுகப்படுத்தும்போது அவர்களின் திறன்கள் குறித்து கம்பனின் எழுத்து பிரம்மாண்டமாய் இருக்கும். கம்பன் எழுதிய கதையும் திரைக்கதையும் வலுவானது. அதனால் தான் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் நடிகர்கள் மாறிக் கொண்டே இருக்கிறார்கள். படங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு பாத்திரங்களுக்கேற்ப வசனங்களை சிந்தித்து எழுதியிருப்பார் கம்பன். அம்புகளை எதிர்கொண்டு வந்த அம்புகளை இன்றைய போர்க்களங்களில் ஏவுகணைகளை விட்டு வீழ்த்தும் காட்சிகளை பார்க்க முடிகிறது 2 அப்போதே கற்பனையை யோசித்துப் பார்த்தவர் கம்பன். அன்றைக்கு செய்த கற்பனைகள் இப்போது அறிவியல்பூர்வமாக செயல்பாட்டுக்கு வருவது ஆச்சரியமாக இருக்கிறது. மீண்டும் மீண்டும் ராமாயணம் பேசப்படுவதற்கு காரணம், அந்தப் புராணத்தில் எல்லாத் தரப்பையும் கொண்டு வந்திருப்பதுதான் என்றார் பாக்கியராஜ். முன்னதாக கம்பன் கழக கூடுதல் செயலர் ச. பாரதி வரவேற்றார். முடிவில், கவிஞர் ஏ.எம். ஷெரீப் நன்றி கூறினார். முன்னதாக நடைபெற்ற மாணவர் அரங்குக்கு ஸ்ரீ பாரதி மகளிர் கலை அறிவியல் கல்லூரியின்கலை அறிவியல் கல்லூரியின் தலைவர் குரு. தனசேகரன் தலைமை வகித்தார். விழா ஏற்பாடுகளை கம்பன் கழகத் தலைவர் எஸ். ராமச்சந்திரன், செயலர் ரா. சம்பத்குமார் ஆகியோர் செய்தனர்.

Tags

Next Story