கனவில் இசை குறிப்பு கவிதை நூல் வெளியீடு

நூல் வெளியீட்டு விழா
புதுக்கோட்டை வீதி கலை இலக்கிய களம் சார்பில் கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் எழுதிய 'கனவின் இசை குறிப்பு' என்ற கவிதைநூல் வெளியீடு மற்றும் அறிமுக விழா நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் எழுத்தாளர் நா. முத்துநிலவின் தலைமை வகித்தார். புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் தங்கமூர்த்தி நூலை வெளியிட்டு, தொடக்கவுரை நிகழ்த்தினார்.
நூல் பற்றி தமுஎகச மாவட்ட த் தலைவர் ராசி பழனிசெல்வன், நிகழ் ஒருங்கிணைப்பாளர் சூர்யா சுரேஷ், திருச்சி வட்டாரக் கல்வி அலுவலர் இரா.ஜெயலட்சுமி,அறந்தாங்கி திசைகள் அமைப்பின் தலைவர் டாக்டர் தெட்சிணாமூர்த்தி, தமுஎகச மாவட்ட செயலர் ஸ்டாலின் சரவணன் உள்ளிட்டோரும் பேசினர். பா.ஸ்ரீ மலையப்பன் வரவேற்றார். கவிஞர் த.ரேவதி தொகுத்ளித்தார். நூலாசிரியர் மைதிலி கஸ்தூரி ரெங்கன் ஏற்புரை வழங்கினார். முடிவில் மு.கீதா நன்றி கூறினார்.
