வழிகாட்டி பலகையால் அவதி என வாகன ஓட்டிகள் புகார்

வழிகாட்டி பலகையால் அவதி என வாகன ஓட்டிகள் புகார்

வழிகாட்டு பலகையால் வாகன ஓட்டிகள் அதிருப்தி

வழிகாட்டி பெயர் பலகையில் குறிப்பிடப்பட்டுள்ள ஊர் எத்தனை கி.மீ., துாரத்தில் உள்ளது என்ற விபரம் குறிப்பிடப்படவில்லை என்ற வாகன ஓட்டிகள்.

காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலை, பெரியார் நகரில், நெடுஞ்சாலைத் துறை சார்பில், வந்தவாசி, உத்திரமேரூர், வேலுார், காஞ்சிபுரத்திற்கு எந்த திசையில் செல்ல வேண்டும் என வழிகாட்டி பெயர் பலகை அமைக்கப்பட்டுள்ளது.

தாம்பரம், செங்கல்பட்டு, வாலாஜாபாத், படப்பை, ஒரகடம் உள்ளிட்ட பகுதியில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி வரும் வாகன ஓட்டிகள், வழிகாட்டி பெயர் பலகையை பார்த்து, தாங்கள் செல்ல வேண்டிய ஊரின் திசையில் செல்கின்றனர். இந்த வழிகாட்டி பலகையால் வெளியூர் வாகன ஓட்டிகளுக்கு பயனாக இருந்தாலும், சின்ன காஞ்சிபுரத்தில் இருந்து, வழிகாட்டி பெயர் பலகையில் குறிப்பிடப்பட்டுள்ள உத்திரமேரூர், வந்தவாசி, வேலுார் உள்ளிட்ட ஊர் எத்தனை கி.மீ., தூரத்தில் உள்ளது என்ற விபரம் குறிப்பிடப்படவில்லை.

இதனால், வாகன ஓட்டிகள் தாங்கள் செல்ல வேண்டிய ஊர் எத்தனை கி.மீ., தூரத்தில் உள்ளது என தெரியாமல் குழப்பத்துடன் செல்கின்றனர். எனவே, வெளியூர் வாகன ஓட்டிகள் குழப்பமின்றி பயணிக்கும் வகையில், வழிகாட்டி பெயர் பலகையில் குறிப்பிடப்பட்டுள்ள ஊர்கள் எத்தனை கி.மீ., துாரத்தில் உள்ளது என்ற விபரத்தை குறிப்பிட வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story