தொடர்மழையால் அடுத்தடுத்து நிரம்பி வரும் காஞ்சிபுரம் ஏரிகள்

தொடர்மழையால் அடுத்தடுத்து நிரம்பி வரும் காஞ்சிபுரம் ஏரிகள்

நிரம்பிய ஏரிகள் 

தமிழக வங்கக் கடலில் ஏற்பட்ட மிக்ஜம் புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஐந்து தினங்களாக கன மழை பெய்தது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில் 25 ஏரிகள் முழு கொள்ளளவையும் 43 ஏரிகள் 75% தாண்டியும் 93 ஏரிகள் 50 சதவீதத்தை தாண்டியும் நீர் நிரம்பியுள்ளது. இதேபோல் பாலாறு உப வடி நில கட்டுப்பாட்டியுள்ள 1022 ஏரிகளில் 682 ஏரிகள் முழு கொள்ளளவையும் , 112 ஏரிகள் 75% எட்டி உள்ளது. மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய ஆறு ஏரிகளில் 5 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. தமால் ஏரி மட்டும் 60 சதவீதத்தை எட்டியுள்ளது. இந்த முக்கிய ஐந்து ஏரிகளில் சேமிக்கப்பட்ட நீர் மூலம் சுமார் 17 ஆயிரம் ஏக்கர் விவசாய பலன் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story