பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்

பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்

பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா

விஜயராகவன் பெருமாள் கோவிலில் மாசி மாச பிரம்மோற்சவ விழா.

காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழியில், ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட 108 திவ்யதேசங்களில் ஒன்றான மரகதவல்லி தாயார் சமேத விஜயராகவ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும். அதன்படி, நடப்பு ஆண்டுக்கான பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதையொட்டி காலை 6:50 மணிக்கு கொடிமரத்திற்கும், கொடிக்கும் வேதவிற்பன்னர்கள் வாயிலாக பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு கோவில் கொடி மரத்தில் கொடியேற்றபட்டது. தொடர்ந்து, விஜயராகவ பெருமாள் பவழக்கால் சப்பரத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா வந்தார்.

மூன்றாம் நாள் உற்சவமான, கருடசேவை உற்சவம் நடக்கிறது. இதில், பாலுசெட்டிசத்திரத்தில் மண்டகப்படி உற்சவம் நடக்கிறது. ஏழாம் நாளான, மார்ச் 10ல் காலை தேரோட்டம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் செயல் அலுவலர் தியாகராஜன், ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி, உதவி ஆணையர் லஷ்மிகாந்த பாரதிதாசன் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.

Tags

Next Story