காஞ்சி பஸ் நிலையத்தில் ஓடிய கழிவுநீர் - கண்துடைப்புக்காக அடைப்பு நீக்கும் பணி

காஞ்சி பஸ் நிலையத்தில் ஓடிய கழிவுநீர் - கண்துடைப்புக்காக அடைப்பு நீக்கும் பணி

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் 

காஞ்சியில் கழிவுநீர் பிரச்னை இதுபோல் அடிக்கடி ஏற்படுவதால் பயணியர் போக்குவரத்து ஊழியர்கள் வியாபாரிகள் பாதிக்கின்றனர்
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து, பல்வேறு வழித்தடங்களில், 300க்கும் மேற்பட்ட பேருந்துகள் அன்றாடம் இயக்கப்படுகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான பயணியர் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். ஆனால் பேருந்து நிலையம் முறையாக பராமரிக்கப்படாததால் பயணியர் பல வகையில் பாதிக்கின்றனர். பேருந்து நிலைய வளாக பணிமனை நுழைவாயில் முன்பகுதியில் தடம் எண் 76பி, 76சி பேருந்து அருகில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு பேருந்து நிலையத்தில் கழிவுநீர் நேற்று வழிந்தோடியது. பணிமனை நுழைவாயில் முன், 'மேன்ஹோல்' வழியாக துர்நாற்றத்துடன் வெள்ளப்பெருக்கு போல, நேற்று காலை வெளியேறிய கழிவுநீர் செங்கல்பட்டு, திருத்தணி, திருப்பதி, தாம்பரம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிக்கான பேருந்து நிறுத்தம் பகுதிகளில் வழிந்தோடியது. கழிவுநீர் பிரச்னை இதுபோல் அடிக்கடி ஏற்படுவதால் பயணியர், போக்குவரத்து ஊழியர்கள், வியாபாரிகள் பாதிக்கின்றனர். பேருந்து நிலையத்திற்குள் வந்தவர்கள் மூக்கை பொத்திக் கொண்டு கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய அவலநிலை நேற்றும் ஏற்பட்டது. அடைப்பு நீக்கும் பணியும் கண்துடைப்பாக நடைபெறுவதாக அங்குள்ளவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'பேருந்து நிலையத்தில் உள்ள உணவகங்களில் இருந்து, அதிகளவில் கழிவுநீர் வருவதால் இப்பிரச்னை ஏற்படுகிறது. உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

Tags

Next Story