காஞ்சியில் சாய் தளம் இல்லாததால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம்

காஞ்சியில் சாய் தளம் இல்லாததால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம்

சாலை

காஞ்சியில் சாய் தளம் இல்லாததால் வாகன ஓட்டிகளுக்கு சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

காஞ்சிபுரம் அடுத்த, ஏனாத்துார், எம்.ஜி.ஆர்., நகரில், ஆதிதிராவிடர் குடியிருப்புகளுக்கான அடிப்படை வசதிகள் வழங்கும் திட்டத்தில், 13 லட்சம் ரூபாய் செலவில், சிமென்ட் சாலை போடப்பட்டு உள்ளது.

இந்த சிமென்ட் சாலை தாழ்வாகவும், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஓரம் இருக்கும் மழைநீர் கால்வாய் உயரமாகவும் இருக்கிறது. சிமென்ட் சாலையில் இருந்து, மழைநீர் கால்வாய் மீது செல்லும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலைக்கு செல்ல முடியாத அளவிற்கு, தடுப்பாக உள்ளது.

இதனால், சிமென்ட் சாலையில் இருந்து, சென்னை- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழும் அபாயம் உள்ளது. எனவே, இந்த மழைநீர் கால்வாய் ஓரமாக, சிமென்ட் சாய்தளம் அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து, வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவர் கூறுகையில், 'சம்பந்தப்பட்ட பணி மேற்பார்வையாளரை அனுப்பி, அந்த பிரச்னைக்கு ஏற்ப தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்."

Tags

Next Story