காஞ்சி வரதர் கோவிலில் பிரம்மோற்சவம் நிறைவு

காஞ்சி வரதர் கோவிலில் பிரம்மோற்சவம் நிறைவு

வெட்டி வேர் சப்பரத்தில் வரதராஜ பெருமாள் 

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், நடப்பு ஆண்டுக்கான பிரம்மோற்சவம் கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தங்க சப்பரத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும் வரதராஜ பெருமாள் எழுந்தருளி வீதியுலா வந்தார். இதில், பிரபல உற்சவங்களான மூன்றாம் நாளான கடந்த 22ம் தேதி காலை கருடசேவை உற்சவமும், கடந்த 26ம் தேதி காலை தேரோட்டமும், நேற்று முன்தினம் காலை, அனந்தசரஸ் தெப்பகுளத்தில் தீர்த்தவாரி உற்சவமும் வெகு விமரிசையாக நடந்தது.இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான நேற்று, இரவு 7:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியருடன் வரதராஜ பெருமாள் வெட்டிவேர் சப்பரத்த்தில் எழுந்தருளி உலா வந்தார். 10 நாட்களாக விமரிசையாக நடந்து வந்த காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவம் நேற்றுடன் நிறைவு பெற்றது.

Tags

Next Story