"காஞ்சி வரதர் கோவிலில் தவன உற்சவம் துவக்கம்"
காஞ்சி வரதர் கோவிலில் தவன உற்சவம்
தாயார் சன்னிதியில் இருந்து, கண்ணாடி அறைக்கு எழுந்தருளினார். அங்கு பெருமாள், தாயாருக்கு திருமஞ்சனம் நடந்தது
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், நடப்பாண்டிற்கான தவன உற்சவம் நேற்று துவங்கியது. உற்சவத்தையொட்டி நேற்று, காலை 9:00 மணிக்கு தாயார் சன்னிதியில் இருந்து, கண்ணாடி அறைக்கு எழுந்தருளினார். அங்கு பெருமாள், தாயாருக்கு திருமஞ்சனம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள சக்கரத்தாழ்வார் சன்னிதி பின்புறம், தோட்டத்தில் உள்ள மண்டபத்தில், தாயார், ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அங்கு சுவாமிக்கு திருவாராதனம், நிவேதனம், தீர்த்தம், சடாரி, துாப, தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன. இரவு 7:30 மணிக்கு தோட்டத்தில் இருந்து பெருமாள், தாயார் புறப்பாடும், பக்தி உலாத்தலும் நடந்தது. இரவு 8:00 மணிக்கு ஆழ்வார் பிரகாரமாக பெருமாள், தாயார் எழுந்தருளினர். தொடர்ந்து பெருமாள் கண்ணாடி அறைக்கும், தாயார், சன்னிதிக்கும் எழுந்தருளினர். மூன்று நாட்கள் நடக்கும் தவன உற்சவம், நாளையுடன் நிறைவு பெறுகிறது.
Next Story