காஞ்சி வீராங்கனைக்கு த்ரோபாலில் தங்கம்

காஞ்சி வீராங்கனைக்கு த்ரோபாலில் தங்கம்

தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குழு எறிபந்துப் போட்டியில் காஞ்சிபுரத்தை சேர்ந்த கிளாரா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குழு எறிபந்துப் போட்டியில் காஞ்சிபுரத்தை சேர்ந்த கிளாரா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

நேபாளம் மற்றும் இந்தியா பாரா த்ரோபால் விளையாட்டு சங்கம் சார்பில், நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில், மாற்றுத்திறனாளிகளுக்கான குழு எறிபந்து போட்டி கடந்த மாதம் 29ல், நடந்தது. தமிழகத்திலிருந்து மதுரை, ஈரோடு, காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த நான்கு பேர் உட்பட மொத்தம் ஏழு பேர் ஒரு குழுவாக பங்கேற்றனர். இந்தியாவுக்கும், தாய்லாந்துக்கும் நடந்த போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்றது.

இதில், பங்கேற்ற ஏழு பேரும், தேசிய அளவில் தங்கப்பதக்கம் பெற்றனர். இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பங்கேற்ற, எழிச்சூர் அருகே உள்ள மதுவந்தாங்கல் மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் கிளாரா பீட்டர், 40, தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குழு எறிபந்துப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இவர், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வியிடம் வாழ்த்து பெற்றார்."

Tags

Read MoreRead Less
Next Story