காஞ்சிபுரம் பிரதமர் திட்டத்தில் வீடு கட்டாத 2,223 பேர் கண்டுபிடிப்பு

காஞ்சிபுரம்  பிரதமர் திட்டத்தில் வீடு கட்டாத 2,223 பேர் கண்டுபிடிப்பு

பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார், உத்திரமேரூர் ஆகிய ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் முறையான வீடு இல்லாமல் சிரமப்படுவோருக்கு, அதாவது கான்கிரீட் வீடு அல்லாதவர்களுக்கு பயனடைய, பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் மற்றும் 'ஆவாஸ் பிளஸ்' திட்டத்தை, மத்திய அரசு கொண்டு வந்தது. இத்திட்டங்களில் தேர்வான 12,189 பேருக்கு, வீடு கட்டும் ஆணை வழங்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு வீடு கட்டும் பயனாளிகளும், தலா 2.40 லட்சம் ரூபாய் செலவில், கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொள்ளலாம். தவிர, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், 90 நாட்களுக்கு 100 நாள் வேலை செய்து கொள்ளலாம் எனவும், அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும், துாய்மை பாரத இயக்கத்தில், தனிநபர் இல்ல கழிப்பறை கட்டுவதற்கு, 12,000 ரூபாயை, அரசு கூடுதலாக ஒதுக்கீடு செய்து கொடுக்கிறது. இது போன்ற சலுகைகள் வழங்கப்படும் நிலையில், மேற்கண்ட திட்டங்களில் கட்டப்படும் வீடுகள் குறித்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள், சமீபத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர். இதில், விண்ணப்பித்த 12,189 வீடுகளுக்கு, 9,966 வீடுகள் மட்டுமே கட்டுமான பணிகளை நிறைவு செய்துள்ளதும், 2,223 வீடுகள் கட்டவில்லை என்பதும் தெரிந்தது.

Tags

Next Story