காஞ்சிபுரம் ஆதி காமாட்சி அம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் ஆதி காமாட்சி எனப்படும் ஆதி பீடபரமேஸ்வரி காளிகாம்பாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் ஆதி காமாட்சி எனப்படும் ஆதி பீடபரமேஸ்வரி காளிகாம்பாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் பழமையும் வரலாற்று சிறப்பும் வாய்ந்த ஶ்ரீ ஆதி காமாட்சி அம்மன் என்னும் ஆதிபீட பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி யாகசாலை பூஜைகள். இம்மாதம் 7 ஆம் தேதி அனுக்கை, கணபதி பூஜையுடன் தொடங்கின. மறுநாள் நவக்கிரக ஹோமம் மூர்த்தி ஹோமம் ஆகியவை நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று ஆறாம் கால யாக பூஜைகள், தீபாராதனைகள் நிறைவு பெற்ற பிறகு புனித நீர்க் குடங்கள் சிவாச்சாரியார்களால் கோபுரங்களுக்கு மங்கல மேள வாத்தியங்களுடன் எடுத்துச் செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மூலவர் காளிகாம்பாளுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது . கும்பாபிஷேக விழாவில் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தை யொட்டி ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வான வேடிக்கைகளும் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர், கோவில் அறங்காவலர்கள் குழுவினர் ,திருக்கோவில் அர்ச்சகர்கள் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீரை தெளித்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story