காஞ்சிபுரம் : ஆஸ்துமா தின விழிப்புணர்வு

X
விழிப்புணர்வு நிகழ்ச்சி
காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உலக ஆஸ்துமா தினத்தையொட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
உலக ஆஸ்துமா தினத்தையொட்டி, காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் வி.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில், டாக்டர் ராதிகா, ஆஸ்துமா நோய் என்றால் என்ன? நோய் எவ்வாறு ஏற்படுகிறது. நோயின் அறிகுறிகள், நோய் தடுப்பு முறைகள் குறித்து விளக்கம் அளித்தார்.
ஆஸ்துமா நோய் வந்தால் எவ்வாறு சிகிச்சை பெறுவது? தற்போதுள்ள நவீன மருத்துவத்தில் ஆஸ்துமா நோய்க்கான பல்வேறு நவீன சிகிச்சை முறைகள் குறித்து வரைபடம் மற்றும் வாசகங்களுடன் பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பொதுமக்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், கண்காணிப்பாளர்கள், மருத்துவமனை ஊழியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
Next Story
