மாவட்ட வேளாண்துறை பணிகளை திடீர் ஆய்வு செய்த ஆட்சியர்

மாவட்ட வேளாண்துறை பணிகளை திடீர் ஆய்வு செய்த ஆட்சியர்

காஞ்சிபுரம் ஆட்சியர்

காஞ்சிபுரத்தில் வேளாண்மை வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்

காஞ்சிபுரத்திலுள்ள வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அலுவலகத்தில் பணியாற்றி வரும் அலுவலர்களிடம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் மற்றும் மானிய உதவிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

இதனை தொடர்ந்து மண்பரிசோதனை நிலையம், பூச்சிக்கொல்லி ஆய்வகம், உரக்கட்டுப்பாட்டு ஆய்வகம், ஒருங்கிணைந்த பூச்சி நோய் நிர்வாக மையத்தில் உள்ள பணிகள் மற்றும் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும் உரம் மற்றும் பூச்சி மருந்தின் தர நிர்ணயம் மற்றும் தரக்கட்டுப்பாட்டு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.பின்பு மண் பரிசோதனை நிலையத்தின் மூலம் மண் மாதிரிகள் எடுக்கும் பணி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட உரிய அறிவுரை வழங்கி, அனைத்து விவசாயிகளுக்கும் மண் மாதிரி எடுத்தல் குறித்த அவசியத்தினை உணர்த்தும்படி அறிவுரை வழங்கினார்.

Tags

Next Story