காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி ஆய்வு

காஞ்சிபுரம்  ஆட்சியர் அதிரடி ஆய்வு

காஞ்சிபுரம் ஆட்சியர்

புஞ்சையரசந்தாங்கல் மற்றும் சிறுகாவேரிபாக்கம் ஊராட்சிகளில் குடிநீர் பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகளை இன்று மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்

காஞ்சிபுரம் ஒன்றியம் புஞ்சையரசந்தாங்கல் ஊராட்சிக்குட்பட்ட பகுதியிலுள்ள வீடுகளுக்கு தினசரி தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யப்படும் 30000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, ஒவ்வொரு முறை நீரேற்றும்போதும் குளோரினேஷன் செய்யப்பட்டு சுகாதாரமான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறதா என்பதையும் மற்றும் பயிற்சி பெற்ற மகளிர் சுய உதவிக் குழுவினர் குடிநீரின் தரம் குறித்தான பரிசோதனைகளை செய்வதை பார்வையிட்டு, மாதம் இருமுறை மேல்நிலை நீர்தேக்க தொட்டியானது சுத்தம் செய்யுமாறும் அறிவுறுத்தினார்.

மேலும் பழங்குடியினர் குடியிருப்புகள் 2022-23 திட்டத்தின்கீழ் புஞ்சையரசந்தாங்கல் ஊராட்சியில் 15 பயனாளிகளுக்கு ரூ.65.61 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் பழங்குடியினர் குடியிருப்புகளை பார்வையிட்டு, 10 வீடுகள் கூரை மட்டம் நிலையிலும், 5 வீடுகள் கூரை முடிவுற்ற நிலையில் உள்ளதை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பணிகள் விரைந்து முடித்திட அறிவுறுத்தினார்.

இதனை தொடர்ந்து நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகள் 2022-23 திட்டத்தின் கீழ் சிறுகாவேரிப்பாக்கம் ஊராட்சியில் சிறுகாவேரிப்பாக்கம் முதல் சித்தேரிமேடு வரை 1.40 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.73.63 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட தார்ச்சாலையை பார்வையிட்டு, சிறுகாவேரிப்பாக்கம் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் பயன்பாட்டிற்காக ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறியளவிலான சமுதாய கழிவறையினை பார்வையிட்டு, விரையில் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு கேட்டுக்கொண்டார் .

சிறுகாவேரிப்பாக்கத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு பணிகள் குறித்து கேட்டறிந்து, ஊராட்சி மன்ற அலுவலகத்தையும் பார்வையிட்டு, சிறுகாவேரிப்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலவத்தை பார்வையிட்டு, கிராம ஊராட்சியில் இணையவழி வரி வசூலித்தல், கட்டிட அனுமதி போன்றவற்றின் செயல்பாடுகள் குறித்து ஆய்விடப்பட்டு பொதுமக்களுக்கான சேவைகளை காலதாமதமின்றி வழங்க ஊராட்சி மன்றத் தலைவருக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். இவ் ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story