காஞ்சிபுரம் தொகுதி பாமக வேட்பாளர் அறிவிப்பு!

காஞ்சிபுரம் தொகுதி பாமக வேட்பாளர் அறிவிப்பு!

ஜோதி வெங்கடேசன் 

காஞ்சிபுரம் தொகுதியில் பாமக வேட்பாளராக ஜோதி வெங்கடேசன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது,
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024இல் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் அக்கட்சி சார்பில் போட்டியிடும் 9 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதல் பட்டியலை பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ளார். காஞ்சிபுரம் (தனி) மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், காஞ்சிபுரம் தொகுதியில் பாமக வேட்பாளராக ஜோதி வெங்கடேசன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பாமக தருமரி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அரசாங்கம் என்பவர் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக தருமபுரி பாமக வேட்பாளராக அன்புமணி ராமதாஸின் மனைவி சவுமியா ராமதாஸ் அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story