காஞ்சிபுரம் மாவட்ட அளவிலான விற்பனையாளர் மற்றும் கொள்முதலாளர் சந்திப்பு
மாவட்ட ஆட்சியர்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான விற்பனையாளர்கள் மற்றும் கொள்முதல் செய்வோருக்கான கலந்துரையாடல் கூட்டம் நடத்தி மகளிர் சுய உதவிக்குழுவினரின் உற்பத்தி பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு ஏற்படுத்தித் தர மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது,
2023-24 ஆம் ஆண்டு செயல் திட்டத்தின்படி புதிய வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட அளவிலான விற்பனையாளர்கள் மற்றும் கொள்முதல் செய்வோருக்கான கலந்துரையாடல் கூட்டம் 29.02.2024க்குள் நடத்திட மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், சென்னை அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம், வஞ்சுவாஞ்சேரி, படப்பையில் உள்ள ராசி பொறியியல் கல்லூரியில் 17.02.2024 அன்று காலை 10.00 மணிக்கு மாவட்ட அளவிலான விற்பனையாளர் மற்றும் கொள்முதலாளர் சந்திப்பு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் தலைமையில் நடைபெறவுள்ளது.
எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தைச்சேர்ந்த முன்னணி உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், உற்பத்தியாளர் கூட்டமைப்புகள், மொத்த விற்பனையாளர்கள், கொள்முதல் செய்து சுத்திகரிப்பு செய்பவர்கள், ஏற்றுமதியாளர்கள், ஓட்டல் நிறுவனங்கள் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் ஆகியோர் உதவி திட்ட அலுவலர் – 9444094282 மற்றும் உதவி திட்ட அலுவலர் – 9444094281 ஆகியோரை தொடர்பு கொண்டு தங்களது தகவல்களை பதிவு செய்து கொள்ளவும்.
17.02.2024 அன்று காலை 10.00 மணிக்கு ராசி பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ள மாவட்ட அளவிலான விற்பனையாளர் மற்றும் கொள்முதலாளர் சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.