காஞ்சிபுரம் திமுக வேட்பாளர் ஜி. செல்வம் தீவிர வாக்கு சேகரிப்பு

செய்யூர், அம்மனூர், பரமண்கேனி, வடக்குச் செய்யூர், புத்தூர், பகுதிகளில் காஞ்சிபுரம் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் ஜி.செல்வம் தமிழக அரசின் சாதனைகளை எடுத்து கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் ,செய்யூர், அம்மனூர், பரமண்கேனி, வடக்குச் செய்யூர், புத்தூர், ஆகிய பகுதிகளில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு பொதுமக்கள் மலர் தூவி மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய குழு பெருந்தலைவர் ஆர்.டி.அரசு ஒன்றிய கழக செயலாளர்கள் எம்.எஸ்.பாபு, ஒன்றிய குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி தணிகாசலம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். காஞ்சிபுரம் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் ஜி. செல்வம் திமுக அரசின் சாதனைகளை கூறி வாக்குகளை சேகரித்தார்.

Tags

Next Story