பிப்ரவரி ஒன்றாம் தேதி காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
பைல் படம்
கோவில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் மையப்பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு சுந்தராம்பிகை உடனுறை அருள்மிகு கச்சிபேஸ்வரர் திருக்கோயில். இத்திருக்கோயில் தலை சம்பந்தப்பட்ட நோய்கள் தீர்க்கும் பரிகார ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது. இதன் காரணமாக இந்த கோவிலுக்கு தமிழகத்தில் அனைத்து பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இந்நிலையில் இத்திருக் கோயிலின் மகா கும்பாபிஷேகம் எனும் பெருங்குட நன்னீராட்டு பெருவிழா வரும் பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி நடைபெற உள்ளது.
இதனை யொட்டி திருக்கோயில் நிர்வாக குழு சார்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வரும் 28-ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கி ஆறு கால பூஜை தொடர்ந்து நடைபெற்று பிப்ரவரி ஒன்றாம் தேதி காலை 10 மணி அளவில் விமானம் ராஜகோபுரம் ரிசி கோபுரம் உள்ளிட்ட அனைத்து நிலைகளுக்கும் குடமுழுக்கு விழா நடைபெறுவதாகவும் அதனை தொடர்ந்து மகா அபிஷேகமும் மாலை 6 மணிக்கு திருக்கல்யாணம் அதனைத் தொடர்ந்து நான்கு ராஜ வீதிகளில் வீதி உலா நடைபெறும் எனவும் தெரிவித்தனர்.
இந்த குடமுழுக்கு விழாவையொட்டி 33 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டும் 60 சிவாச்சாரியார்களால் பல்வேறு கோமங்கலம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியின் போது தலைவர் பெருமாள், செயலாளர் சுப்பராயன், பொருளாளர் சிற்றம்பலம் உள்ளிட்ட கோயில் நிர்வாகிகள் திருக்கோயில் சிவாச்சாரியார்கள் என பல கலந்து கொண்டனர்.