காஞ்சிபுரம் வீரர் கின்னஸ் சாதனை

காஞ்சிபுரம் வீரர் கின்னஸ் சாதனை

உலக சாதனை படைத்த வீரர்

காஞ்சிபுரத்தில் தொடர்ச்சியாக ஆறு மணி 35 நிமிட நேரத்துக்கு ஹாக்கி மட்டையை செங்குத்தாக நேர் நிறுத்தி அதனை சமநிலைப்படுத்தி காஞ்சிபுரம் வீரர் உலக சாதனை படைத்தார்.

காஞ்சிபுரம் அடுத்த திம்மசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார். (39).விளையாட்டின் மீது தீராத ஆர்வம் கொண்ட இவர் விளையாட்டு முக்கியத்துவத்தை அனைவரும் உணரும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், கடந்த 2019 முதல் தற்போது 2024 வரை 642 கிராம் எடை உடைய ஹாக்கி மட்டையை செங்குத்தாக நேர் நிறுத்தி சமநிலையில் தொடர்ச்சியாக ஆறு மணி நேரத்திற்கு மேலாக நிலை நிறுத்தும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.

இதனைத் தொடர்ந்து ஏற்கனவே உள்ள கின்னஸ் உலக சாதனையான 6 மணி நேரம் ஐந்து நிமிடம் என்ற சாதனையை முறியடிக்கும் முயற்சியில், இன்று காலை அறிஞர் அண்ணா விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இறகு பந்து விளையாட்டு அரங்கில் தனது சாதனை முயற்சியை தொடங்கினார். இந்த சாதனை முயற்சி தொடக்க விழாவில் சுறா நீச்சல் பயிற்சி மையத்தின் தலைவர் சாந்தாராம், மாவட்ட விளையாட்டு நீச்சல் பயிற்சியாளர் ஆனந்த் ஆகியோர் பங்கேற்று , வாழ்த்துரை வழங்கி சாதனை முயற்சியினை துவக்கி வைத்தனர்.

இந்த சாதனை முயற்சி கண்காணிக்க கோபிநாத் , ரேவதி , பரணிதரன், சுரேஷ் உள்ளிட்ட நான்கு உடற்கல்வி ஆசிரியர்கள் மேற்பார்வையாளர்கவும் , இரண்டு உடற் கல்வி ஆசிரியர்கள் நேர கண்காணிப்பாளராகவும் பணிபுரிந்து வருகின்றனர். தொடர்ந்து தனது நிலையை தொடர்ச்சியாக சமன்படுத்தி இறுதியாக 6 மணி நேரம் 35 நிமிடங்கள் தொடர்ந்து நிலை நிறுத்தி புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.

ஏற்கனவே இவர் லிம்கா சாதனை புத்தகத்தில் இதே முயற்சியில் ஈடுபடுத்தி 2மணி 45 நிமிடங்கள் நிலைநிறுத்தி தன் சாதனையை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் மற்றும் கண்காணிப்பாளர்களின் பரிந்துரை உள்ளிட்டவைகள் கின்னஸ் உலக சாதனை புத்தக நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அதன் சரிபார்ப்புகள் முழுவதும் நிறைவு பெற்றவுடன் உலக சாதனையாக அறிவிக்கப்படும் என தெரிய வருகிறது.

Tags

Next Story