காஞ்சிபுரம் : கைத்தறி பூங்காவை திறந்து வைத்த அமைச்சர்கள்

காஞ்சிபுரம் ஜரிகை ஆலை வளாகத்தில் கைத்தறித்துறை சார்பில் முதல் சிறிய அளவிலான கைத்தறி பூங்காவினை கைத்தறி துறை அமைச்சர் காந்தி, சிறுகுறு தொழில் அமைச்சர் அன்பரசன் ஆகியோர் திறந்து வைத்தனர்

தமிழ்நாடு அரசு கைத்தறித்துறை சார்பில் தமிழகத்தில் 10 சிறிய அளவிலான கைத்தறி பூங்காக்கள் காஞ்சிபுரம் திருவள்ளூர், வேலூர், சேலம், ஈரோடு , தஞ்சாவூர், விருதுநகர், கோயம்புத்தூர், ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மூன்று கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டின் மூலம் அமைக்கப்பட உள்ளதாக கைத்தறித்துறை அமைச்சர் காந்தி சட்ட பேரவையில் அறிவித்து இருந்தார்.

அவ்வகையில் காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு ஜரிகை ஆலை வளாகத்தில் தமிழ்நாடு அரசு பங்களிப்பான ரூ 2 கோடி மற்றும் தொழில் முனைவோர் பங்காக ஒரு கோடி ரூபாய் என மூன்று கோடி ரூபாய் மதிப்பில் 100 தறிகள் இரண்டு கட்டங்களாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பிரிண்டட் பட்டு சேலை, பட்டு சேலை, பட்டு வேட்டி, காஞ்சிபுரம் பட்டு சேலைகள் என உற்பத்தி செய்யப்படும். இதன் மூலம் நேரடியாக 125 நெசவாளர்களும், மறைமுகமாக 300 நபர்களும் வேலைவாய்ப்பு பெறுவர். இந்த கைத்தறி பூங்காவில் பணிபுரியும் நெசவாளர்களுக்கு சராசரி நாள் ஒன்றுக்கு 50 முதல் 900 வரை ஊதியமாக கிடைக்கும்.

இந்த கைத்தறி பூங்கா மூலம் ஆண்டு வெற்றி முதல் ஒன்பது கோடி ரூபாய் இருக்கும் எனவும் தெரிய வருகிறது. அவ்வகையில் இன்று காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் கைத்தறித்துறை அமைச்சர் காந்தி சிறு குறு தொழில் நிறுவனங்கள் அமைச்சர் அன்பரசன் ஆகியோர் சிறிய அளவிலான கைத்தறி பூங்காவினை திறந்து வைத்து பார்வையிட்டனர். மேலும் அவ்வளாகத்தில் ஜரிகை தொழிலாளர்கள் மற்றும் நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினியும் பார்வையிட்டு பல்வேறு மருத்துவ சிகிச்சைகளுக்கு உரிய ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினர்.

காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு வளாகப் புனரமைப்பு பணி , முருகன் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க புதிய கட்டிடப்பணி துவக்கம் மற்றும் கைத்தறி பொருட்கள் கண்காட்சி உள்ளிட்டவைகளையும் அமைச்சர்கள் துவக்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து நெசவாளர்களுக்கு முத்ரா கடன் திட்ட உதவிகளையும், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் மற்றும் கைத்தறித்துறை அலுவலர்கள் பட்டு கூட்டுறவு சங்க தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story